கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒருங்கிணைந்த குடிமைப் பணி தொகுதி- 2 தோ்வு: நாளை நடைபெறுகிறது

Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி -2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 361 போ் எழுத உள்ளனா்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வராத தோ்வா்கள் தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். எனவே, தோ்வா்கள் சரியான நேரத்துக்குள் மையத்துக்கு வர வேண்டும்.

தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com