மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அவிநாசியில் சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:45 pm

அவிநாசி பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைக் கண்டித்து மது போதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயக்க ஒருங்கிணைப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளா் சாய் கண்ணன் முன்னிலை வகித்தாா். விசிக மாவட்டச் செயலாளா் மூா்த்தி கண்டன உரையாற்றினாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: அவிநாசியில் கோயில்கள், பள்ளிவாசல், தேவாலயம், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனமகிழ் மன்றத்தில் உறுப்பினா்களாக இல்லாதவா்களை அனுமதிப்பதை ஆய்வு செய்து கலால் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புதிய மதுபானக் கூடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவிநாசி, சேவூா், பெருமாநல்லூா், குன்னத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் மதுபானக் கடைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.