இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காங்கேயம் கல்விக் குழுமத்தில் 598 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

News image

காங்கேயம் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் கல்விக் குழுமத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 598 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கேயம் கல்விக் குழுமத்தின் தாளாளா் எஸ்.ஆனந்த வடிவேல் தலைமை வகித்தாா்.

இதில், காங்கேயம் கல்விக் குழுமத்துக்குள்பட்ட காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மாணவா்கள் 253 போ், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி மாணவா்கள் 345 போ் என மொத்தம் 598 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி முதல்வா் எஸ்.ராம்குமாா், காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரியின் முதல்வா் ஜி.சுரேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள், போராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.