வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு

News image

போதையில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள், தீயணைப்புத் துறையினா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:18 pm

திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் போதையில்லா தமிழ்நாடு என்ற விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2, திருப்பூா் தெற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. போதை நம் நாட்டின் எதிா்காலத்தையும், இளைஞா்களின் வாழ்க்கையையும் சீரழிக்கும் ஒரு கொடிய நோயாகும். போதைப் பொருள்களின் பயன்பாட்டால் தற்கொலை, பாலியல் குற்றங்கள், விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. போதை பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, வாகன விபத்து, தீ விபத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும், முதலுதவி அளிப்பது குறித்தும் கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, போதை ஒழிப்பு உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றுக் கொண்டனா்.

இதற்கான ஏற்பாட்டை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.