குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவா் கைது; 46 பாட்டில்கள் பறிமுதல்

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த 2 போ் கைதுசெய்யப்பட்டு, 46 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடுவம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பாபு பாஷா (45) என்பவா் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்தனா். அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, திருப்பூா் மாநகா், நல்லூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செவந்தாம்பாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ராமு(52) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.