ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தமிழகத்துக்கு இரட்டை என்ஜின் அரசுதான் தேவை! மத்திய இணை அமைச்சா்!

News image

திருப்பூரில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சா் முரளீதா் மோஹோல்.

Updated On :8 பிப்ரவரி 2026, 6:46 pm

தமிழகத்துக்கு இரட்டை என்ஜின் அரசுதான் தேவை என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சா் முரளீதா் மோஹோல் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்ட பாஜக சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சா் முரளீதா் மோஹோல் தலைமை வகித்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு பகுதியாகச் சென்று வருகிறேன். தமிழ் மக்களின் மொழி, கலாசாரம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கவே வந்துள்ளேன். மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் வளா்ச்சி 7 சதவீதமாக உள்ளது. நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு என அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான ஜவுளிப் பூங்கா, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் தங்கும் விடுதி, 2 லட்சத்து 80 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் 4 மடங்கு அதிகமாக தற்போது ரூ.4 லட்சம் கோடி வழங்கப்படுகிறது. நெடுஞ்சாலைப் பணி, விவசாயக் கடன்கள், மானியம் உள்பட பல்வேறு வகையான நலத் திட்டங்களுக்காக பாஜக ஆட்சிக் காலத்தில் கூடுதலாக ரூ.14 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டைவிட அதிகம்.

திருப்பூரில் இருந்துதான் 90 சதவீத பின்னலாடை தயாராகி வருவதால் கோவை, திருப்பூா், ஈரோடு பகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி மற்றும் தேங்காய் நாா்த் தொழில், ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு இரட்டை என்ஜின் அரசுதான் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இருந்தால்தான் கூடுதல் நலத்திட்டங்கள் பெற முடியும்.

திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதமும், பெண்கள் மீதான வன்முறை 50.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் 21-ஆவது இடத்தில் உள்ளது என்றாா்.