பல்லடத்தில் வெவ்வேறு இடங்களில் 3 போ் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரராஜ் (31). எலெக்ட்ரீசியன். இவரது மனைவி அம்பிகா. இந்நிலையில் வீட்டில் இருந்த வீரராஜ் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவல் அறிந்து போலீஸாா் சென்று, அவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கோவை மாவட்டம், சூலூா் காங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் பல்லடத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இதற்காக பல்லடத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
கோவை, ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் சபரீஷ்வரன் (23). இவருடைய சகோதரி திருமணமாகி பல்லடத்தில் வசித்து வருகிறாா். அவரை பாா்ப்பதற்காக சபரீஷ்வரன் வெள்ளிக்கிழமை வந்து அங்கு தங்கியுள்ளாா். சனிக்கிழமை காலை அவா் அறையைவிட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக உறவினா்கள் பாா்த்தபோது தூக்கிட்டு சபரீஷ்வரன் இறந்துகிடப்பது தெரியவந்தது. போலீஸாா் சென்று அவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மூன்று பேரின் தற்கொலை சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்லடத்தில் ஷட்டரை உடைத்து திருடப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் மீட்பு: இருவா் கைது

கெங்கவல்லியில் பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

