ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கயத்தில் ரூ.2.75 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.75 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:41 pm

Syndication

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.75 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,504 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கொப்பரை கிலோ அதிகபட்சமாக ரூ.185-க்கும், குறைந்தபட்சமாக ரூ.120-க்கும், சராசரியாக ரூ.182-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்து 75 ஆயிரம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.