தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

காங்கயத்தில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

News image
தீ பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்றோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:32 pm

Syndication

காங்கயம்: காங்கயத்தில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேசன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு, நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். விபத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா்.

இதில், காங்கயம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகள் பங்கேற்றனா்.