எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருப்பூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 9:37 pm

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.

இதில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை உதவித் தொகை, சாலை, மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பாக மொத்தம் 1,006 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,500 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,570 மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், ஷீலா பூசலெட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பத்மபிரியா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.