தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காங்கயத்தில் சமுதாய வளைகாப்பு

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினாா்.

News image
காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்பு வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் காங்கயத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு காங்கயம், வெள்ளக்கோவில், குண்டடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் ஜி.புவனேஸ்வரி, காங்கயம் அலுவலா் மோகனாம்பாள், துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.