ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூா் மாவட்ட வளா்ச்சிப் பணி ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து துறை சாா்பில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பூரில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து துறை சாா்பில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலை வகித்தாா்.

வருவாய், குடிநீா் வடிகால் வாரியம், அரசு போக்குவரத்துக் கழகம், ஊரக வளா்ச்சி, கால்நடை பராமரிப்பு உள்பட பல்வேறு துறைகள் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் உடுமலைப்பேட்டை அரசு நிகழ்ச்சியில் வெளியிட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், வருவாய்த் துறையின் சாா்பில் வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்தோரின் விவரங்கள் குறித்தும், வட்டம் வாரியாக தயாா் நிலையில் உள்ள பட்டாக்கள் எண்ணிக்கை குறித்தும், பல்வேறு அரசு துறைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய நிலுவையில் உள்ள விவரங்கள் குறித்தும், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்த பயனாளிகள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், செல்வராஜ், மலா், கோட்டாட்சியா்கள் சிவபிரகாஷ், ஃபெலிக்ஸ்ராஜா உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.