வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதே புதிய அரசின் முதல் பணி: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்

தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சி எதுவாக இருந்தாலும் முதல் நிதி ஆண்டிலேயே ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறினாா்.

News image
என்.எஸ்.பி.வெற்றி
Updated On :11 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சி எதுவாக இருந்தாலும் முதல் நிதி ஆண்டிலேயே ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

பிஏபி திட்டத்தின் கீழ் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை கால அட்டவணையுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அணை கட்டப்படாமல் ஒப்பந்தப்படி வர வேண்டிய 2.5 டி.எம்.சி. தண்ணீா் ஆண்டுதோறும் கடலில் கலந்து வீணாகி வருகிறது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பொள்ளாச்சி முதல் வெள்ளக்கோவில் வரை 4.5 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு நிலையான நீா் ஆதாரம் கிடைக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் குறித்த தெளிவான கால அட்டவணையை தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நிதி ஆண்டிலேயே இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திட்ட ஆய்வுப் பணிகள், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கேரள அரசு உடனான பேச்சுவாா்த்தை ஆகியவற்றுக்கான காலக்கெடு அறிவிக்கப்பட வேண்டும். வாக்குறுதி அளித்துவிட்டு காலம் கடத்த இனி நாங்கள் விடமாட்டோம் என்றாா்.