மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நகை திருட்டு வழக்கில் இருவா் கைது: 15 பவுன் பறிமுதல்

நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை புதன்கிழமை மீட்டனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம். ~பிரவீன்குமாா் ~முருகன்

Updated On :11 பிப்ரவரி 2026, 8:31 pm

நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை புதன்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சித்தம்பலம் பிரிவு விஐபி காா்டன் பகுதியில் ஜெகதா ரூபி என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவுப்படி பல்லடம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையிலும், பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயதேவி ஆகியோா் தலைமையிலும் உதவி ஆய்வாளா்கள் அமல் ஆரோக்கியதாஸ், முருகன், குற்றப்பிரிவு காவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவு உதவியுடன் குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், கோவை - சேலம் புறவழிச்சாலையிலுள்ள தனியாா் உணவகம் அருகே பதுங்கி இருந்த நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தேனி ஃபாரஸ்ட் சாலை ஜெயக்குமாா் மகன் பிரவீன்குமாா் (24), கோவை இருகூா் பிரிவு அன்பு மகன் முருகன் (41) ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பல்லடம், அவிநாசி, சூலூா் ஆகிய மூன்று இடங்களில் திருடிய விவரம் தெரியவந்தது. மேலும், பல்லடத்தில் திருடுபோன நகைகளில் சுமாா் 15 பவுன் மீட்கப்பட்டது.

இதேபோல, அவிநாசி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் பல்லடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, துப்பு துலக்கி குற்றவாளிகளை துரிதமாக கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image