அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு மறியல்

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 18-ஆவது வாா்டுக்குள்பட்டது வடுகபாளையம் விடுதி சாலை பகுதி. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சரிவர குடிநீா் வரவில்லை என்றும், உடனடியாக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், காவல் ஆய்வாளா் மாதையன் ஆகியோா் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில் நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதிக்கு தண்ணீா் விநியோகம் செய்தது. அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.