தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பனியன் நிறுவன அலுவலா் அடித்துக் கொலை

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:32 pm

Syndication

அவிநாசி அருகே பனியன் நிறுவன அலுவலா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி போலீஸாா், தடவியல் நிபுணா்கள், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் அவிநாசி அருகேயுள்ள சூளை மாருதி நகா் பகுதியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் டோமினிக் சகாயராஜ் (51) என்பதும், பனியன் நிறுவன அலுவலரான இவருக்கு மனைவி ராணி, 2 பெண்கள் குழந்தைகள் உள்ளதும், புதன்கிழமை இரவு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

அவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீஸாா், கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.