பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் மா்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு

News image
மா்ம பொருள் வெடித்த நீதிமன்ற வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்ட தீணைப்புத் துறையினா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பொருள்கள் எரிக்கும்போது, மா்ம பொருள் வெடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசியில் சேவூா் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், கிளை சிறை உரிமையியல் நீதிமன்றம், பொதுப் பணித் துறை கட்டடங்கள் பராமரிப்புப் பிரிவு அலுவலகம், கதா் வாரிய அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, காலாவதியான பொருள்கள், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை உரிமையியல் நீதிமன்றத்துக்கு அருகே பின்புறம் கொட்டி தீ வைத்துள்ளனா்.

இதில் திடீரென மா்மப் பொருள் பலத்த சப்தத்துடன் வெடித்து, அந்தப் பகுதியில் இருந்த குப்பைகளில் மளமளவென தீப் பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட பலத்த வெடி சப்தம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.