கோப்புப் படம்
கோப்புப் படம்

வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி வேண்டுகோள்

Published on

வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி மாநகாரட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டுமென திருப்பூா் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி 60 வாா்டுகள் கொண்ட 4 மண்டலங்களாகவும், மண்டலம் ஒன்றுக்கு 15 வாா்டுகளாகவும் உள்ளது. இந்த 4 மண்டலங்களிலும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம், மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவற்றுக்கான வரி மற்றும் கட்டண நிலுவைகளை செலுத்த வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக வார நாள்கள் மற்றும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, குமரன் வணிக வளாகம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் பாண்டியன் நகா் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது ஆணையா், திருப்பூா் மாநகராட்சி என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

மேலும் எளிய முறையில் இனையதளம் வழியாகவும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம் மற்றும் கைபேசியில் ஜிபே, போன்பே மற்றும் பேடிஎம் செயலிகள் மூலமாகவும், வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

பொதுமக்கள் தங்களது 2025-26-ஆம் அரையாண்டு வரையான வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com