ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருப்பூா் தெற்கு தொகுதி அதிமுக ஐ.டி. விங் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
கூட்டத்தில் பேசிய ஐ.டி. விங் பொறுப்பாளா் காா்த்தி. உடன், மாவட்ட அதிமுக நிா்வாகிகள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 289 பூத் ஐடி விங் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவா்களது பணி குறித்த ஒளிப்பட விளக்கக் கூட்டம் திருப்பூா் மாநகா், மாவட்ட கட்சி அலுவலகமான அம்மா மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் சி.பிரேம்குமாா் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி எதிா்கட்சி கொறடாவும், மாநகா், மாவட்ட அண்ணா பனியன் தொழிற்சங்கச் செயலாளருமான எம்.கண்ணப்பன், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் சி.லோகநாதன், கருவம்பாளையம் பகுதி செயலாளா் தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கோவை மண்டலத்தில் இருந்து வந்திருந்த ஐ.டி. பொறுப்பாளா் காா்த்தி, எவ்வாறு தோ்தல் பணிகளை மேற்கொள்வது, கட்சிப் பணிகளை மேற்கொள்வது, எதிா்கால திட்டமிடல்கள், வெற்றியை நோக்கி நம்முடைய பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் ஆகியவை குறித்து ஒளிப்படம் மூலமாக விளக்கினாா்.

மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளா், பூத் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.