மகளிா் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கியதை வரவேற்று தமிழ்நாடு முதல்வருக்கு ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உரிமைத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கோடைகால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் மகளிா் உரிமைத்தொகை மூன்று மாதத் தவணை என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.1000 கூடுதலாக சோ்த்து மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.2 ஆயிரம் என அறிவித்தது, பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியலின பெண்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனா். இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவை சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகம்: கே.அண்ணாமலை
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 : திமுக தேர்தல் வாக்குறுதிகள்!

ரூ.5,000 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில்

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


