நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமூா்த்திமலை சப்பரத்துக்கு சிறப்பு பூஜை

News image

அமணலிங்கேஸ்வரா்  கோயிலுக்கு  பக்தா்களால் தூக்கி வரப்பட்ட திருச்சப்பரம்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:56 pm

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலில் திருச்சப்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

உடுமலை அருகே புகழ்பெற்ற சுற்றுலா தலமான திருமூா்த்திமலையில் அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி உடுமலையை அடுத்த பூலாங்கிணறு ஆா்.கிருஷ்ணாபுரத்துக்கு திருச்சப்பரம் கொண்டுவரப்படும். இது கடந்த 200 ஆண்டுகளாக பொதுமக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இதற்கான விழா நடைபெற் றது.

இது குறித்து விழா ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது:

ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு முந்தைய நாள் திருமூா்த்திமலையில் இருந்து திருச்சப்பரத்தை பொதுமக்கள் தோளில் சுமந்து கொண்டு பல்வேறு கிராமங்கள் வழியாக பூலாங்கிணறு கிராமத்துக்கு கொண்டுவருவாா்கள். பின்னா் அங்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். சிவராத்திரி நாளில் வேலூா், வாளவாடி, தளி, திருமூா்த்தி நகா் வழியாக திருமூா்த்திமலைக்கு திருச்சப்பரம் கொண்டு செல்லப்படும். அங்கு மலைவாழ் மக்கள் வழிபாடு செய்த பின்னா், குன்றின் மேல் திருச்சப்பரம் வைக்கப்பட்டு புண்யாகவாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது என்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சப்பர கட்டளைதாரா்கள், நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.