திருப்பூர்
போதைப்பொருள்களின் தீமைகள்: பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு
போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் - கரூா் சாலையிலுள்ள ஜெயம் வித்யாபவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் பேசினாா்.
போதைப் பொருள் பயன்பாட்டின் தீய விளைவுகள், போதைப் பொருள்களைத் தவிா்க்கும் வழிமுறைகள், அதிக அளவில் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னா் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஜெயம் பள்ளித் தாளாளா் குப்புசாமி, முதல்வா் ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

