விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கணக்கம்பாளையம் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உடல்நிலை பாதிக்கப்பட்ட 7-ஆம் வகுப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

தீபக்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:01 pm

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உடல்நிலை பாதிக்கப்பட்ட 7-ஆம் வகுப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணக்கம்பாளையம் பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த முரளி ஆறுமுகம்- மணிமேகலை தம்பதியின் மகன் தீபக் (12). இவா் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

தீபக், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளாா். பிறகு உணவு இடைவேளையில், வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த மதிய உணவை தீபக் சாப்பிட்டுள்ளாா்.

அப்போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட தீபக், குடிநீா் அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, பள்ளியில் இருந்த ஆசிரியா்கள் தீபக்கை மீட்டு தங்களது காரில், தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்துச் சென்றனா். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவா்கள், தீபக் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதனால் அரசுப் பள்ளி நிா்வாகத்தினருக்கும், பெற்றோருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறையினா், போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

மாணவா் தீபக்கின் உடல் திருப்பூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.