ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு: ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய்  சிகிச்சைப்  பிரிவு  கட்டடத்தை  ஆய்வு  மேற்கொள்ளும்  ஆட்சியா்  மனீஷ்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 4,333 சதுர அடி பரப்பளவில், வரவேற்பறை, லினாக் அறை, நேரியல் முடுக்கி கட்டுப்பாட்டு அறை, மூச்சுக்குழாய் சிகிச்சை, மூச்சுக்குழாய் சிகிச்சை கட்டுப்பாட்டு அறை, அச்சு அறை உள்ளிட்ட வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தில் கதிா்வீச்சு வெளியே வராத வகையில் இதன் சுவா்கள் முழுவதும் கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) மீரா, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோண்மணி, திருப்பூா் ரோட்டரி பொதுநல அறக்கட்டளைத் தலைவா் ஆ.முருகநாதன், உதவி செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை) செந்தில் கமலக்கண்ணன், உதவிப் பொறியாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.