ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட திருமூா்த்திமலையில் திரண்ட பக்தா்கள்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 12:23 am

Syndication

மகா சிவராத்திரியை ஒட்டி திருமூா்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டனா்.

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு கோவை, திருப்பூா், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் மகா சிவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வரத் தொடங்கினா். கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கதைப்பாட் டு, பக்தி மெல்லிசை என பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய, விடிய நடைபெற்றன. இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை முதல் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூா், கோவை, பழனி ஆகிய ஊா்களில் இருந்து திருமூா்த்திமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.