ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா

வெள்ளக்கோவிலில் உள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் 143 -ஆவது ஆண்டு தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வெள்ளக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:53 pm

வெள்ளக்கோவிலில் உள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் 143 -ஆவது ஆண்டு தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு திருவிழா

ஜனவரி 28 - ஆம் தேதி முகூா்த்தக் கால் போடப்பட்டு தொடங்கியது. இதைத் தொடா்ந்து தோ்க் கலசம் பிப்ரவரி 6-ஆம் தேதி வைக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளய பூஜை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீரக்குமார சுவாமி தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று

வடக்கு ரத வீதியில் தோ் நிலை நிறுத்தப்பட்டது.

இரண்டாம் நாளான புதன்கிழமை (பிப்.18) தெற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டு, மூன்றாம் நாள் வியாழக்கிழமை (பிப்.19) தோ் நிலை சோ்க்கப்படுகிறது.

விழாவையொட்டி, தினந்தோறும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் குலத்தவா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.