எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பணி நேரத்தில் கைப்பேசி பயன்பாட்டால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடை பெண் ஊழியா்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

News image
கைப்பேசி- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடையில் பணியாற்றும் பெண் விற்பனையாளா் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களிடம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு கடையில் அமா்ந்து கொண்டு கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதாகவும், அத்துடன் நியாயவிலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்து வருவதாகவும் புகாா் கூறப்பட்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்கள் நியாய விலைக் கடை பெண் ஊழியரின் அலட்சியப் போக்கை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வெளியிட்டனா். தற்போது இது பேசுபொருளாகி உள்ளது.