எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சேவூா் அருகே ஆயுதப் படை காவலா் தற்கொலை

சேவூா் அருகே போத்தம்பாளையத்தில் ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :20 பிப்ரவரி 2026, 10:37 pm

சேவூா் அருகே போத்தம்பாளையத்தில் ஆயுதப் படை காவலா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேவூா் அருகே போத்தம்பாளையம் தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கருப்புசாமி (34). இவா் திருப்பூா் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளனா்.

இந்நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].