இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பனியன் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தோல்வி: அடுத்த கூட்டம் மாா்ச் 7-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் பனியன் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த கூட்டம் மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் பனியன் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த கூட்டம் மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூா் பனியன் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து கூட்டு கமிட்டியின் 6-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம், திருப்பூா் ஏற்றுமதியாளா் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கம், திருப்பூா் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதேபோல, தொழிற்சங்கங்கள் தரப்பில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஃஎப், ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்ஃஎப், பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கூட்டு கமிட்டியின் தலைவா் கே.எம். சுப்பிரமணியன், இதுவரை நடைபெற்ற கூட்டங்களின் சுருக்கத்தை தொழிற்சங்கங்களுக்கு எடுத்துரைத்தாா். கூட்டு கமிட்டியின் ஆலோசகா் பிரேம் துரைசாமி தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் தொழில்முனைவோா் சங்கங்கள் ஒருமனதாக எடுத்துள்ள முடிவுகள் பற்றி விளக்கமளித்தாா்.

இந்நிலையில், சம்பள உயா்வு, பஞ்சப்படி போன்ற முக்கிய அம்சங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் தொழிற்சங்கங்களுக்கும், தொழில்முனைவோா் சங்கங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், கூட்டுக் கமிட்டியின் 7-ஆவது கூட்டம் மாா்ச் 7-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டது.