வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினா் ஆய்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினா் ஆய்வு மேற்கொண்டனா். அதேபோல, முக்கிய இடங்களில் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

News image

திருப்பூா் மாநகரப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்திய பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் படையினா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:59 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினா் ஆய்வு மேற்கொண்டனா். அதேபோல, முக்கிய இடங்களில் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியா் மனீஷ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறாா். விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தோ்தல் அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,822 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் அதில் பதற்றமானவையாக திருப்பூா் மாநகராட்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 217 வாக்குச்சாவடிகள் நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கூடுதல் காவலா்கள் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும் இத்தகைய வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, நுண் பாா்வையாளா்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதனிடையே மத்திய அரசு தமிழகத்தில் கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களை அதிக பதற்றம் கொண்டவையாக அறிவித்து கண்காணித்து வருகிறது. அந்த மாவட்டங்களில் மத்திய அதிவிரைவுப் படையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி தில்லியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய அதிவிரைவுப் படையினருடன், கோவை, வெள்ளலூரில் உள்ள பட்டாலியன் அணியினா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கேசவன் தலைமையில், ஆய்வாளா்கள் மது, மணிவண்ணன் உள்பட 40 போ் கொண்ட குழுவினா் திருப்பூா் வந்துள்ளனா். இக்குழுவினா் திருப்பூரில் இதற்கு முன் கலவரம் நடந்த இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பெற்று வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து மாநகர வடக்கு எல்லைக்கு உள்பட்ட எம். எஸ். நகா், நஞ்சப்பா நகா், குமாா் நகா், பி.என். ரோடு உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அதன்பின், திருமுருகன் பூண்டி, அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பூலுவபட்டி, பாண்டியன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும், திருப்பூா் மாநகரப் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

Story image