பல்லடம் அருகே 500 கிலோ குட்கா பறிமுதல்

பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் லாரியில் கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் லாரியில் கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மங்கலம் - பல்லடம் சாலையில் பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் உள்ள வாய்கால்மேடு பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடகத்தில் இருந்து வந்த லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில் லாரியில் கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த கோவை மாவட்டம், செட்டிபாளையம் அவிநாசிகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் முனியாண்டி (41) என்பவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com