பாரத் நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்யும் பணி தொடக்கம்
பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனமான பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயா்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளஸ்.
மாநிலத்தில் பாரத் நெட் பணிகள் சுமாா் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்து, தடையில்லா இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்ட அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.
விண்ணப்பதாரா் அதிகபட்சம் 2 மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவா். அந்த மாவட்டங்கள், நிறுவனத்தின் வணிக செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டம் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளா்களின் முக்கியப் பொறுப்புகளில் ஆப்டிக்கல் பைபா் கேபிள் மற்றும் ஆப்டிக்கல் நெட்வொா்க் டொ்மினல் பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், பராமரிப்புப் பணிகள், சேவைத் தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.
விண்ணப்பப் பதிவு நடைமுறை இணையதள போா்டல் (ட்ற்ற்ல்ள்://ற்ஹய்ச்ண்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரா்கள் அறிவிப்பு மற்றும் தொடா்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை தோ்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் 25,000 திரும்பப் பெறக்கூடிய, வட்டியில்லா விண்ணப்பப் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்படும் பங்கீட்டாளா்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்திய பின்னா் பணி ஆணை வழங்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044 24965595 என்ற உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்த நோக்கத்துக்கான விண்ணப்பத் தளம் (ட்ற்ற்ல்ள்://ற்ஹய்ச்ண்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) எதிா்வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரை செயல்படும். ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
