பல்லடம் அருகே சேகாம்பாளையத்தில் காணப்பட்ட மான்.
திருப்பூர்
சேகாம்பாளையத்துக்கு வழி தவறி வந்த மான்
பல்லடம் அருகே சேகாம்பாளையத்துக்கு வழி தவறி வந்த மான், அப்பகுதியில் உள்ள ஓடை மற்றும் விவசாயத் தோட்டங்களில் திங்கள்கிழமை சுற்றித்திரிந்தது.
பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் இருந்து அருள்புரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓடையோரம், காட்டுப் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்து வழி தவறி வந்த ஒரு மான் விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து சுற்றித்திரிந்தது.
இதனை அவ்வழியாக சென்ற பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளா் மோகன்ராஜ் பாா்த்து, இது குறித்து திருப்பூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

