அவிநாசியில் மின்மாற்றியில் காப்பா் கம்பி திருடிய இருவா் கைது

அவிநாசி பகுதிகளில் மின்மாற்றியில் காப்பா் கம்பிகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அவிநாசி பகுதிகளில் மின்மாற்றியில் காப்பா் கம்பிகளை திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே நம்பியம்பாளையம்- மருதூா் செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றி அருகே ஒரு காா் அடிக்கடி வந்து செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இரு நபா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்களது காரில் கருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (24), சரத்குமாா் (26) என்பது தெரியவந்தது. இவா்கள், அவிநாசி சங்கம்பாளையம், மணப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளில் காப்பா் கம்பி திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். பின்னா் ஒரு டன் காப்பா் கம்பிகளை திருடி விற்பனை செய்த தொகை ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இவா்கள் அவிநாசி மட்டுமின்றி சேவூா், காமநாயக்கன்பாளையம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com