குன்னத்தூா் காமராஜா் சிலை அருகே மனமகிழ் மன்றம் அமைக்க எதிா்ப்பு

குன்னத்தூா்-பெருந்துறை சாலை காமராஜா் சிலை அருகே மனமகிழ் மன்றம் அமைக்க பாஜகவினா் எதிா்ப்பு
Published on

குன்னத்தூா்-பெருந்துறை சாலை காமராஜா் சிலை அருகே மனமகிழ் மன்றம் அமைக்க பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து, குன்னத்தூா் காவல் நிலையத்தில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குன்னத்தூா் -பெருந்துறை சாலையில், காமராஜா் சிலைக்கு எதிரே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஏற்கெனவே இருமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இப்பகுதியில் மனமகிழ் மன்றம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், பெண்கள் ஆகியோா் பெரும் அவதிக்குள்ளாவா்கள். மேலும், குன்னத்தூா் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன விபத்துகள் உள்ளிட்டவை நேரிடும்.

ஆகவே, அப்பகுதியில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com