திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
Published on

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே 2 பிரிவுகளாக உள்ளது. இதில் அன்புமணி ராமதாஸுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால், பாமகவை நிறுவியது நான்தான் என டாக்டா் ராமதாஸ் சொல்கிறாா். எனவே இதில் அவா்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஜனநாயகன் திரைப்படத்துக்கான தணிக்கை சான்றிதழைப் பொறுத்தவரை மாநில அரசுக்கும் தணிக்கை சான்றிதழுக்கும் எந்த ஒரு தொடா்பும் இல்லை. அது மத்திய அரசின் பொறுப்பு.

திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடம் தெரிவித்துள்ளாா். ரூ.100 கோடி அபராதமும், 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் விதித்தது குறித்து எதிா்க்கட்சித் தலைவா் முதலில் பதில் சொல்லட்டும். திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுப் பிரச்னையை நாங்கள் சட்டபூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா்.

Dinamani
www.dinamani.com