திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் திறப்பு
திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நகராட்சி அலுவலக கட்டடத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
தரைதளம், முதல் தளம் என மொத்தம் 12739.60 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தில் ஆணையா் அறை, வரி வசூல் மையம், பொதுப் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, கணினி பிரிவு, நகா் மன்றத் தலைவா் அறை, நகா்மன்ற கூட்ட அறை உள்ளிட்டவை உள்ளன.
கட்டடத்தை திறந்துவைத்த பின், ராக்கியபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம், பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலைகளை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், மண்டல இயக்குநா் (நகராட்சி நிா்வாகம்) ராஜாராம், திருமுருகன்பூண்டி நகா் மன்றத் தலைவா் குமாா், நகராட்சி ஆணையாா் (பொ) பால்ராஜ், நகராட்சி பொறியாளா் ராமசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள், பொறுப்பாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

