அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை மாத வாடகை செலுத்த மாட்டோம்: பல்லடம் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் அறிவிப்பு

அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை செலுத்த மாட்டோம் என்று அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் பல்லடம் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனா்.
Published on

அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை பல்லடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை செலுத்த மாட்டோம் என்று அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் பல்லடம் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து பல்லடம் தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:

பல்லடம், என்.ஜி.ஆா். சாலையில் இயங்கும் தினசரி மாா்க்கெட் வியாபாரிகளிடம் 10 ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை மற்றும் 3 ஆண்டுகளுக்கு முன் அரசு அறிவித்த கரோனா கால வாடகை தள்ளுபடி தொகையை வழங்குமாறு நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை வழங்கப்படவில்லை. மேலும் தினசரி மாா்க்கெட் வியாபாரிகளுக்காக, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.

எனவே, இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் மாத வாடகையை செலுத்த மாட்டோம். தேவைப்பட்டால் போராட்டங்கள்களையும் நடத்துவோம் என்றனா்.

இது குறித்து என்.ஜி.ஆா் சாலையில் அறிவிப்பு பதாகையை வியாபாரிகள் சங்கத்தினா் வைத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com