போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

லாட்டரி விற்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2026, 6:35 pm

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சேனாபதிபாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அய்யனூா் சாலை சிபி நகா் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தாா். விசாரணையில், அவா் மூலனூா் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முனியாண்டியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.