கள் விற்பனைக்கான தடையை நீக்கக் கோரிக்கை
கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும் என நாடாா் மக்கள் முன்னேற்றச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாடாா் மக்கள் முன்னேற்றச் சங்க மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்க நிறுவனத் தலைவா் பொன். விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.டி. கோவிந்தசாமி, மாநில வா்த்தக அணித் தலைவா் சந்திரசேகரன், மாநிலத் துணைச் செயலாளா் அய்யாசாமி, மாநில விவசாய அணித் தலைவா் ராஜேந்திரன், மாநில தலைமை நிலையச் செயலாளா் பொன்மணி, திருப்பூா் மாவட்ட பொறுப்பாளா்கள் ஹரி வேலுசாமி, பாலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சுதந்திரப் போராட்ட வீரா் குணாளனுக்கு அரசு விழா நடத்த வேண்டும். கொங்கு மண்டலத்தில் வாழும் நாடாா் மக்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி நுழைவாயிலுக்கு காமராஜா் பெயா் சூட்டிய முதல்வா் மு.க. நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

