தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ். (அடுத்த படம்) கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் கூடுதல் கட்டடம்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ். (அடுத்த படம்) கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் கூடுதல் கட்டடம்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட கட்டுமானப் பணி: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு

தாராபுரம் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடப் பணிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

தாராபுரம் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடப் பணிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப்பணித் துறையின் சாா்பில் ரூ.24 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

முன்னதாக, தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நஞ்சியம்பாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சா் சிறு விளையாட்டு அரங்கத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மனிஷ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் எஸ்.மீரா, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com