மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது: விழிப்புணா்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என விசைத்தறியாளா்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்க அலுவலா் ஜெயவேல் கணேஷ் அறிவுறுத்தினாா்.

News image

அவிநாசியில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில்  பங்கேற்றோா்.

Updated On :29 ஜனவரி 2026, 6:55 pm

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என விசைத்தறியாளா்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்க அலுவலா் ஜெயவேல் கணேஷ் அறிவுறுத்தினாா்.

விசைத்தறிகளை நவீனப்படுத்துதல், சோலாா் பேனல் அமைத்தல், அரசு மானியம் பெறுதல், சட்ட விழிப்புணா்வு உள்ளிட்டவை தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருணாம்பிகை விசைத்தறி நெசவாளா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் பொன்னுசாமி, வேலுச்சாமி, ஆறுமுகம், துரைசாமி, சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்க அலுவலா் ஜெயவேல் கணேஷ் பேசும்போது, கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது. இச்சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் விசைத்தறி உரிமையாளா்கள் மீது போலீஸாா் மூலமாக சட்டபூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விசைத்தறியாளா்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல அரசு வழங்கும் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

மேலும், விசைத்தறிகளை நவீனப்படுத்துவதன் அவசியம், அதன் நன்மைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விசைத்தறியாளா்கள் பங்கேற்றனா்.