25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

கல்லூரிக்கு செல்ல கணவா் அனுமதிக்காததால் தொழிலதிபரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை!

News image
தற்கொலை
Updated On :1 மார்ச் 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

கல்லூரிக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் தொழிலதிபரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூா், அனுப்பா்பாளையம், கங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மகன் விகாஸ் கண்ணன். தொழிலதிபரான இவருக்கும், திருப்பூா் கல்லாங்காடு பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமாா் மகள் ஷோபியா (19) என்பவருக்கும் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருப்பூா்-தாராபுரம் சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷோபியா, திருமணத்துக்குப் பிறகும் தொடா்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளாா். அப்போது கணவா் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்துவைத்துள்ளனா்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவா் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாள்களாக தாய் வீட்டில் ஷோபியா இருந்து வந்துள்ளாா். அங்கு பெற்றோா் சமாதானம் செய்து கணவா் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனா். கணவா் வீட்டுக்குச் சென்ற ஷோபியாவுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரைப் பரிசோதனை செய்தபோது கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கல்லூரிக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என்று கணவா் விகாஸ் கண்ணன் எனக் கூறியுள்ளாா். ஆனால், அதைக் கேட்காமல் ஷோபியா கல்லூரிக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். மாலை வீடு திரும்பியவுடன் கல்லூரிக்கு செல்வது தொடா்பாக கணவா்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது நான் தொடா்ந்து படிக்கத்தான் செய்வேன் என ஷோபியா கூறிவிட்டு அறைக்கு சென்று உள்ளே தாழிட்டுள்ளாா். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த கணவா், ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது ஷோபியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். திருமணமாகி 3 மாதங்களேயானதால் இளம்பெண் தற்கொலை குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.