தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிட்ஸ் கிளப் பள்ளியில் விளையாட்டு தின விழா

News image

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்கள். உடன், கிட்ஸ் கிளப் பள்ளி தலைவா் மோகன் காா்த்திக் உள்ளிட்டோா்.

Updated On :20 மார்ச் 2026, 1:53 am IST

திருப்பூா் கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.

எஸ்.டி. நிறுவனத் தலைவா் பி. சண்முகசுந்தரம் தலைமை வகித்து, ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்களான தேசிய அளவிலான கிக் பாக்ஸா் சபரி, தேசிய அளவிலான டேக்வாண்டோ வீரா் வெற்றிச்செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, விளையாட்டின் முக்கியத்துவம், ஒழுக்கம் மற்றும் உடல் நலத்தின் அவசியம் குறித்து உரையாற்றினா்.

இதையடுத்து, மாணவா்களுக்கு ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், கல்வியில் சிறந்த மாணவா்கள், விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், பள்ளியின் தலைவா் மோகன் காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா, நிா்வாக இயக்குநா் ஐஸ்வா்யா நிக்கில் சுரேஷ், முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.