குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :6 மே 2026, 1:57 am IST

வெள்ளக்கோவிலில் மது போதையில் மயங்கிக் கிடந்தவா் உயிரிழந்தாா்.

காங்கயம் பாப்பினி வாழைத்தோட்ட பகுதியைச் சோ்ந்தவா் பாபு (40). திருமணம் ஆகவில்லை. பெற்றோா் 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டனா். கடந்த பல மாதங்களாக வெள்ளக்கோவில் பகுதியில் தங்கியிருந்து கிடைத்த கூலி வேலைக்குச் சென்று வந்தாா். தீவிர குடிப்பழக்கம் இருந்தது. காங்கயம் சாலையிலுள்ள திரையரங்கம் அருகே திங்கள்கிழமை இரவு மதுபோதையில் ஒரு பேக்கரியில் படுத்துக் கிடந்துள்ளாா். காலையில் பாா்த்தபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. அவருடைய சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.