/

வெள்ளக்கோவில் புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக். பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மு.பரிமளம் உள்ளிட்டோா்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மு.பரிமளம் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 7:10 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வெள்ளக்கோவில் புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

மாணவி எல்.மிதுனா 600-க்கு 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தாா். இவா் கணக்குப் பதிவியல், கணினி பயன்பாடு பாடத்தில் 100-க்கும் 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். மாணவி பி.கனிஷ்கா அறிவியல் பாடப் பிரிவில் 579 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளாா். இவா் கணினி அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவிகள் எஸ்.லாவண்யா உயிரியல் பாடப்பிரிவு, பி.பிரியங்கா வணிகவியல் பாடப்பிரிவில் 577 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்தனா். பி.பிரியங்கா கணினி பயன்பாட்டில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி எம்.அனுஹாசினி தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

சிறந்த மற்றும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளா் மு.பரிமளம், எல்கேசி நகா் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே.ராணி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.