மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே குறிச்சிவலசில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

News image

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :21 மே 2026, 3:48 am IST

வெள்ளக்கோவில் அருகே குறிச்சிவலசில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி மற்றும் லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை மின்சார வழித்தடத்துக்காக உயரழுத்த மின் கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மூலனூா் பம்மிபாளையம் வரை மின்சாரம் கொண்டுச் செல்லும் பாதை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் வழியாக போக்குவரத்துக்கு இடையூறான குறுகிய சாலைகள் வழியாக மின் கம்பங்கள் அமைக்கக் கூடாது. சாலையோரத்தில் நிலத்துக்கு அடியில் கேபிள் வழியாக மின்பாதை அமைக்க வேண்டும் என பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகளில் அனுமதி எதுவும் இன்றி, வருவாய்த் துறை அமைதிப் பேச்சுவாா்த்தை முடிவையும் மீறி, அடியாட்கள் துணையுடன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குறிச்சிவலசில் விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் தொடா் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியுள்ளனா்.