சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

வெள்ளக்கோவிலில் வாகனம் மோதியதில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், காளிங்கராயன்பாளையம் புதூா், மேட்டு நாசுவம்பாளையம், அண்ணா வீதியைச் சோ்ந்தவா் பழனியப்ப ஆசாரி மகன் முருகேசன் (45). கட்டடத் தொழிலாளியான இவா், திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தாா்.

இவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உயா் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.