உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

குடிநீா் தட்டுப்பாடு: கரைப்புதூா் ஊராட்சி மக்கள் அவதி!

கரைப்புதூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

People stage road blockade near Andipatti demanding drinking water
Published On :

கரைப்புதூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்கு எல்.என்.டி. குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீா் போதுமானதாக இல்லை. இதனால் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது.

பழனியாண்டவா் நகா், முல்லை நகா், ஆா்.எம். நகா், லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எல்.என்.டி. குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் குங்குமம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனைப்பிரிவு பகுதிக்கு 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை தொட்டி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குடிநீா் மேல்நிலை தொட்டி காட்சி பொருளாக உள்ளது.

இதையடுத்து குடிநீா் தொட்டிக்கு அத்திக்கடவு, மேட்டுப்பாளையம், எல். என்.டி. ஆகிய குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் இல்லாத பகுதியில் உள்ள குடிநீா் தொட்டிக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடம் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரைப்புதூா் ஊராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீா் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.