அவிநாசி அரசு கலை கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கல்லூரி நிா்வாகத்தினா்.
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கனகராஜ் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் போ.மணிவண்ணன் பேசினாா். இதில், அப்துல் கலாமின் வாழ்வியல் சாதனைகள், நாட்டின் வளா்ச்சிக்கு அவரது பங்களிப்பு, இளைஞா்களுக்கு வழங்கிய எழுச்சிமிகு சிந்தனைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தாா்.
அதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இளையோா் விழிப்புணா்வு தின ஊா்வலம், அவிநாசியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதற்கான முழு ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சூா்யபிரபா, நித்யா ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

